Tuesday, August 3, 2010

ஹார்லிக்ஸ் கனவுகள்

ஓட்டை பானையில்
வழியாமல் ஊற்றி வைக்கும்
சோற்று தண்ணீரே
ஏழைகளின் ஹார்லிக்ஸ்

வயிறின் குமுறலை
வெளியே சொல்லாது
கடைகளின் கண்ணாடி பெட்டிக்குள்
ஒளிந்திருக்கும் ஹார்லிக்ஸ் கனவுகள்

வினை பல செய்து
பலன் பெற்றிருக்கும் வீட்டில்
விளையாடும் ஹார்லிக்ஸ் புட்டிகள்
திறக்க படாத மருந்துகள்

ஏழையின் குழந்தை
எட்டி பார்க்கும்
விலை மதிப்புள்ள
தங்கபுஸ்பம ஹார்லிக்ஸ்

அணைத்து ஊட்டமும்
அடங்கி இருக்கும் ஹார்லிக்ஸ்
ஏழை வீட்டில் வாங்க
ஏக பட்ட பாலிடிக்ஸ்

சித்தாள் அம்மா
வேலைக்கார அப்பாவின்
உயரிய குறிக்கோள்
ஒரு முறையாவது ஹார்லிக்ஸ் குழந்தை வாயில்!

Monday, August 2, 2010

வெற்றி படிகள்

புறத்திலே பூசும் மாவை
அகத்திலே பூசு
வென்றிடுவாய் ஜெகத்தை !

சிகரெட் புகை

ஊதி தள்ளும் ஆத்மாக்களே
உங்களால் தான் ஓசோனில் ஓட்டை விழுந்தது போலும்
ஓட்டையை அடைக்க முடியாவினினும்
ஊதுவயதாவது நிறுத்துங்கள் !

Tuesday, July 27, 2010

குடை

கைம்பெண்ணே!
மங்கலத்திற்கு மாங்கல்யம் மட்டும் தானா
மான் விழிகள் போதாதா
விரசம் அல்ல விவேகம்
வீண் செய்து விடாதே உன் வாழ்கையை
வந்து நில் என் குடையில் !