ஓட்டை பானையில்
வழியாமல் ஊற்றி வைக்கும்
சோற்று தண்ணீரே
ஏழைகளின் ஹார்லிக்ஸ்
வயிறின் குமுறலை
வெளியே சொல்லாது
கடைகளின் கண்ணாடி பெட்டிக்குள்
ஒளிந்திருக்கும் ஹார்லிக்ஸ் கனவுகள்
வினை பல செய்து
பலன் பெற்றிருக்கும் வீட்டில்
விளையாடும் ஹார்லிக்ஸ் புட்டிகள்
திறக்க படாத மருந்துகள்
ஏழையின் குழந்தை
எட்டி பார்க்கும்
விலை மதிப்புள்ள
தங்கபுஸ்பம ஹார்லிக்ஸ்
அணைத்து ஊட்டமும்
அடங்கி இருக்கும் ஹார்லிக்ஸ்
ஏழை வீட்டில் வாங்க
ஏக பட்ட பாலிடிக்ஸ்
சித்தாள் அம்மா
வேலைக்கார அப்பாவின்
உயரிய குறிக்கோள்
ஒரு முறையாவது ஹார்லிக்ஸ் குழந்தை வாயில்!
No comments:
Post a Comment